உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சட்டவிரோத மீன்பிடி தடுப்பு நடவடிக்கைகள் – இரண்டு வாரங்களில் 32 பேர் கைது, கடற்படை அதிரடி.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-

இலங்கை கடற்படை மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 13 மீன்பிடி படகுகள், 01 டிராக்டர் வண்டி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்ட மீன்களை ஏற்றிச் சென்ற 02 நபர்கள் மற்றும் 01 லொரியும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள் இணைந்து திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்படை கட்டளையினால் கிண்ணியா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், சுமார் 219 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்கள் மற்றும் 6 கிலோகிராமுக்கும் அதிகமான தபுவா மீன்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், படகுகள், வாகனங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உரிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அலுவலகங்களுக்கும், கிண்ணியா பொலிஸ் நிலையம் கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடல் வளங்களை பாதுகாக்கவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கிலும் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066798

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time