உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில்: பொலிஸாரின் கைத்துப்பாக்கி பறித்து தப்பிய நபர் கைது.!!!

மட்டக்களப்பு – ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவர் பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று (20) திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழமையான பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு வந்த ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் திடீரென பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்திலேயே இடம்பெற்ற இந்த துணிகரச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவினரும் அங்கு இருந்த பொலிஸாரும் இணைந்து தப்பியோடிய சந்தேக நபரை நீண்ட தூரம் துரத்திச் சென்று வெற்றிகரமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது பறிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் சந்தேக நபரிடமிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066719

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time