உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் முயற்சி: தந்தை விரட்டிப் பிடித்து மகளை மீட்டார்.!!!

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முயன்ற கும்பலை, சிறுமியின் தந்தை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து மகளை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தகவலின்படி, குறித்த சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரது தந்தை காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மழை காரணமாக வகுப்பு நடைபெறாததால், நகரில் வசிக்கும் தனது உறவினர் (சிறிய தாயார்) வீட்டில் சிறுமியை விட்டுவிட்டு தந்தை கடைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் சிறுமி வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தெரிவித்ததையடுத்து அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.

அவர் அங்கு வருவதைக் கண்டதும் அருகில் நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகமாக தப்பியோடியது. இதனால் சந்தேகமடைந்த தந்தை தனது காரில் அதனைத் துரத்திச் சென்றுள்ளார்.

பின்னர் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டியை மடக்கிப் பிடித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற இளைஞன் வண்டியை அங்கு விட்டுவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை உடனடியாக அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு முச்சக்கர வண்டியை மீட்க வந்த மற்றொரு இளைஞன், தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரியும் எனக் கூறி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு நகரில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் 15 மற்றும் 16 வயது சிறுமிகளை குறிவைத்து, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழு ஒன்று செயற்பட்டு வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதி பெற்றோரிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871456

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time