கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (17) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையில் தகைமைகளை மீறி இணைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதம நீதவான், அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்து உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.