உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு வாவியில்: அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு.!!!

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை சுமார் 5.00 மணியளவில் அவதானித்த பொதுமக்கள், உடனடியாக இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும், நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட இரு ஆண்களின் சடலங்களையும் மீட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811119

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time