ரூ.9 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள பீடி இலைகள் பறிமுதல்.!!!
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, ரூ.9 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (10) சிலாபம், தட்சுறு ஓயா பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,302 கிலோகிராமுக்கும் அதிகமான ஈர எடையுடைய பீடி இலைகள் மற்றும் 2 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த பெறுமதி ரூ.9 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், 60 சோப்புக் கட்டிகள் அடங்கிய ஒரு பெட்டியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சோப்புகள் மற்றும் இரண்டு டிங்கி படகுகள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிரிபத்கொட/பியகம சுங்கத் திணைக்களத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.