உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்து; இரு சிறுவர்கள் உயிரிழப்பு.!!!

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 மற்றும் 7 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன்–மனைவி இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக குறித்த இரண்டு சிறுவர்களும் கணவன்–மனைவியும் நேற்று மதியம் படகில் சென்றுள்ளனர்.

இதன்போது, அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இரு சிறுவர்களும் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067024

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time