உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0047
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கழிவுநீர் தொட்டியில் இருந்து: 5 மாத ஆண் குழந்தையின் உடலம் மீட்பு.!!!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியிலிருந்து சுமார் ஐந்து மாதங்கள் வயதான ஆண் குழந்தையின் சடலம் ஒன்று நேற்று (13) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இந்த சடலத்தை முதலில் கவனித்துள்ளனர்.

இதையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குழந்தை எவ்வாறு அந்த இடத்திற்கு வந்தது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையா அல்லது வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் தற்போது அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931845

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time