உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே வாவியில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை.!!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் அமைந்துள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை வழமையான மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் குறித்த சடலம் சிக்கியதாகவும், பின்னர் அவர் சடலத்தை கரைக்கு கொண்டு வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066791

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time