உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து: கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்.!!!

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 11 பெண்களும், 16 ஆண்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுள் 5 மாதக் கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

📸 தகவல், படங்கள்: இந்துனில் விஜேநாயக்க

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929447

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time