உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கொழும்பு – கதிர்காமம் வீதியில் பேருந்துகள் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட பலருக்கு காயம்.!!!

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் அமைந்துள்ள “மியாமி” ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காலை நேரத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலையில் ஏற்பட்ட வழுக்கலான நிலைமையின்போது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பாடசாலை பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக குறித்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066780

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time