பேருந்து கட்டணம் 12% அதிகரிப்பு.!!!
நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பின் அடிப்படையில், தற்போது 30 ரூபாவாக உள்ள ஆகக் குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண சேவை பேருந்துகளுக்கான கட்டணம் 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயணத் தூரங்களுக்கு 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட பயணத் தூரங்களுக்கு 20 சதவீதத்தாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், சொகுசு சேவை பேருந்துகளுக்கான கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதுடன், முதல் 100 கிலோமீற்றர் வரையிலான பயணத் தூரங்களுக்கு 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிகமான பயணத் தூரங்களுக்கு 15 சதவீதத்தாலும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.