பேருந்து–மோட்டார் சைக்கிள் விபத்து; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக ஊழியர் உயிரிழப்பு.!!!
மருதமுனை பெட்ரோல் நிரப்பு நிலையம் அருகே இன்று (16) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஜெயராமன் ஜெகிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் என்றும், கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவர் என்றும், தற்போது பாண்டியிருப்பில் திருமண வாழ்க்கை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
விபத்தில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

