SLSI அனுமதியின்றி டின் மீன் உற்பத்தி; பன்னலையில் ரூ.15 இலட்சம் கையிருப்பு சிக்கியது.!!!
பன்னல – எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (07) முற்றுகையிட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், தயாரிப்பு திகதி குறிப்பிடப்படாமை, டின் மீன்களை முறையாகக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நிறுவனத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.