சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்துடன் மோதி விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்ப்பு.!!!
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்காமம்–அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று (20) கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த விபத்தில் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



