உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியைவிட்டு விலகி விபத்து – மூவர் படுகாயம்.!!!

மட்டக்களப்பிலிருந்து கதுருவெலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று மனம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (16) நள்ளிரவு நேரத்தில் மட்டக்களப்பிலிருந்து கதுருவெலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கார், மனம்பிட்டி ஆச்சி சந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கார் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயத்தில் காரில் பயணித்திருந்த மூவர் கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தால் குறித்த கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929982

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time