2027 பாடசாலை சீருடைத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் சீனா; 41.8 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உதவி.!!!
இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகளை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 41.8 இலட்சம் மாணவர்களின் 2027ஆம் ஆண்டுக்கான முழுமையான சீருடைத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 10.820 மில்லியன் மீட்டர் சீருடைத் துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளது.
இந்த நன்கொடைத் திட்டத்துக்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்ற நிகழ்வு, பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த உதவித் திட்டம், மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்துவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

