உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

ஓடும் தொடரூந்தில் ஏறி காலை இழந்த வயோதிபர்; ரிதிதென்னையில் சம்பவம்.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இன்று (13) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை புகையிர நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரத வண்டி ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் செல்லும் போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், காயமடைந்த 60 வயதுடைய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934962

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time