உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப்பாதை அறிமுகம்; களுவாஞ்சிக்குடியில் இருந்து புதிய திட்டம் ஆரம்பம்.!!!

இலங்கையின் முக்கிய சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதற்காக தனிப்பட்ட போக்குவரத்து பாதை (Special Lane) அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் களுவாஞ்சிக்குடி நகரிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பின்னர் தேவைக்கேற்ப நாட்டின் ஏனைய முக்கிய சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஆண்டுதோறும் பதிவாகும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவையாக இருப்பதால், அவற்றைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புதிய தனிப்பாதைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுவதுடன், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066998

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time