உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு ஜூலை 6 வரை ஒத்திவைப்பு.!!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.

அதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றில் ஆஜராகினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்துடன் இந்த வழக்கு தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066882

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time