உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 2017 முதல் முன்னெடுக்கப்பட்ட சதி – அமைச்சர் ஆனந்த விஜேபால.!!!

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. சஹ்ரான் ஹாஷிமுக்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு நபர் மற்றும் குழு குறித்த ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு உதவியளித்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076229

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time