பொருளாதார நெருக்கடி மக்களை முடக்கியது; தங்க அடமானக் கடன் ரூ.351 பில்லியனைத் தாண்டியது.!!!
இலங்கையில் மக்கள் தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள கடன்களின் மொத்த அளவு சுமார் ரூ.351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தின் தாக்கம் காரணமாக, பல்வேறு தரப்பினருக்குச் சொந்தமான சுமார் 10 இலட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மைய கணக்கெடுப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரச் சுமை அதிகரித்துள்ளதையும், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பலர் தங்களது சொத்துகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.