உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஜீப் மோதியதால் மின் கம்பம் முறிவு – கந்தளாயில் மின்சாரம் பல மணி நேரம் பாதிப்பு.!!!

கந்தளாய் பிரதான வீதியில் அமைந்திருந்த மின் கம்பம் ஒன்றை ஜீப் வண்டி மோதித் தள்ளியதையடுத்து கந்தளாய் நகரின் பல பகுதிகளில் பல மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று (27) இடம்பெற்றுள்ளது. கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியில் இருந்து கித்துலூத்து நோக்கிப் பயணித்த பொலெரோ ஜீப் ரக வாகனம் சாரதியின் நித்திரை கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதன்போது வாகனம் இலங்கை மின்சார சபையின் சுற்று மதிலையும் உடைத்துக் கொண்டு வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி சேதப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஜீப் வண்டியின் சாரதியும் அவருடன் இருந்த உதவியாளரும் தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.

விபத்தினால் கந்தளாய் நகரின் பல பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபை பணியாளர்கள் மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ரூபாய் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811092

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time