உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் கால நீடிப்பு: மக்களின் தீர்ப்பே இறுதி – நாமல் ராஜபக்ஷ.!!!
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நியாயமற்ற வரிச் சுமைகளை விதித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உரப் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்த வரிகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டண உயர்வுகள் காரணமாக விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.