உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஆரையம்பதியில் லொறி மோதி விபத்து: துவிச்சக்கரவண்டி பயணி உயிரிழப்பு.!!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரமான விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரின் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கரவண்டி பயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய செல்லன் சின்னகுட்டி என அழைக்கப்படும் நபர் எனவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066729

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time