உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பாசிக்குடா சுற்றுலா விடுதிக்கு அருகில் தீப்பரவல்; பல தென்னை மரங்கள் சேதம்.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பாசிக்குடா தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் தீ பரவிய சம்பவமொன்று நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்விடயத்தில் உடனடியாக செயற்பட்ட தவிசாளர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட பிரதேச செயலாளர், பகுதி கிராம உத்தியோகத்தர், பொலிஸார், தீயணைப்பு ஊழியர்கள், சபைகளின் ஊழியர்கள் அனைவருக்கும் தவிசாளர் எஸ்.சுதாகரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த தீ சம்பவத்தில் பல தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளனர்.

இவ்வாறான தீப்பரவல் சம்பவங்கள் பலமுறை வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியை நாடி வருவதாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை பிரதேசத்துக்கு தீயணைப்பு இந்திரம் மிக முக்கியமாக தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805047

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time