உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காத்தான்குடி கடற்கரையில் தீக்கிரையான மீனவர் வாடி; மீள அமைக்க முன்வந்த நகர சபை உறுப்பினர் பர்சாத்.!!!

காத்தான்குடி எத்துக்கால் கடற்கரையில் தீ விபத்தினால் முற்றாக அழிவடைந்த மீனவர் வாடியை மீள அமைத்துக் கொடுப்பதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எம்.எம். பர்சாத் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான மீனவர் வாடி முழுமையாக எரிந்து சேதமடைந்திருந்த நிலையில், குறித்த இடத்திற்கு நேரில் சென்ற நகர சபை உறுப்பினர் நிலைமைகளை பார்வையிட்டார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மீனவர் வாடியை புதிதாக அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக மாவட்ட கடற்றொழில் அமைப்பின் உறுப்பினர் எம்.எல். அஸ்மி எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, தனது வாழ்வாதாரமான கடற்றொழிலை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளை நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக பாதிக்கப்பட்ட மீனவர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215490

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time