உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காத்தான்குடியில் தமிழ்–முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்திய விசேட கலந்துரையாடல்.!!!

-எம்.ஐ.அப்துல் நஸார்-

காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற தொழில் வாண்மையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடலொன்று புதன்கிழமை (29)  காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சத்தார் எலைட் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் சிறப்பு வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் கலந்துகொண்டு “வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் சிக்கலுக்குள்ளான இன உறவும் 1985 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரான இணக்க உறவு நிலைக்கு மீளத்திரும்பலின் அவசியமும் தேவைப்பாடும்” என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார்.

இக் கலந்துரையாடலில் தொழில்வாண்மையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் நிருவாகச் செயலாளர் அஸ்மி தாஜுதீன்,  அமைப்பின் முக்கியஸ்தர்களான கிழக்கு பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஷ்மல் (பலாஹி), மட்டக்களப்பு மாவட்ட சமாதான சபையின் தலைவர் கே.கமலதாஸ் உட்பட சமூக சமய தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215489

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time