உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: 104 புதிய மெட்ரோ பஸ்கள்; செப்டெம்பர் முதல் சேவையில்.!!!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், 104 புதிய மெட்ரோ பஸ்களை ஏற்றிய கப்பல் நேற்று (29) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பொதுப் போக்குவரத்து துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வசதியான பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இப்புதிய பேருந்துகள், கொழும்பு மாநகரப் பகுதிகளில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக சேவையில் இணைக்கப்படவுள்ளன.

பயணிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பொதுப் போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய பஸ் சேவை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215490

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time