உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

துருப்பிடித்த நிலையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு – பாதுகாப்பு படையினர் விசாரணை.!!!

–பாறுக் ஷிஹான்–

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த  ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேக ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாக காணப்பட்டதுடன் அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி  மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215342

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time