உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பயணப் பொதிகள் வந்தடையும் நகர்வு பொறி (Baggage Carousel) பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 4 பயணப் பொதிகளில் இருந்து, சுமார் 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பயணப் பொதிகளில் 376 சிகரெட் கார்ட்டன்களில் அடங்கிய 75,200 வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையை அரசுடமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066950

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time