உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு.!!!

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம். 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் மா அதிபர் பதவியையும் வகித்தார்.

சி.டி. விக்ரமரத்ன, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066947

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time