உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பெறுவோருக்கு புதிய வசதி; வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.!!!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் தேவையான தகவல்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும், தங்களது வினவல்களை இலகுவாக முன்வைப்பதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி முதல், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுடன் வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக தொடர்புகொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வட்ஸ்அப் இலக்கம்: 071-8595950

குறித்த தொலைபேசி இலக்கம் வட்ஸ்அப் செய்திகள் மூலம் தொடர்புகொள்வதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் தங்களுக்குத் தேவையான தகவல்களை வட்ஸ்அப் ஊடாகப் பெற்றுக்கொள்வதுடன், குறித்த பிரிவுடன் செய்திப் பரிமாற்றம் மேற்கொண்டு தங்களது வினவல்களையும் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இச்சேவையை மேலும் இலகுவாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கிலேயே இந்த புதிய தொடர்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185252

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time