உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பில் அரச பேருந்து–மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்.!!!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அரச பேருந்தும், அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time