உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

போதை மாத்திரை பயன்படுத்திய; 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேரை –  பொலிஸார் விசாரணை.!!!

பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை விசாரணை செய்துள்ளனர்.

இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று அருந்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக எடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230685

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time