உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தொடர்கின்றன.!!!

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பரவியதைத் தொடர்ந்து அவசரமாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தற்போது தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மேலும் யாரேனும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066960

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time