மட்டு–கல்முனை வீதியில் கோர விபத்து; 10 பேர் காயம், சிறுவர்களும் பாதிப்பு.!!!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, மட்டு–கல்முனை பிரதான வீதியில் வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
வாகனங்கள் அதிக வேகத்தில் பயணித்தமையால் சாரதிகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவர் மற்றும் லொறியில் பயணித்த இருவர் என மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தின் தாக்கத்தால் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டவசமான சம்பவமாக இருப்பதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய லொறி கல்முனையிலிருந்து மட்டக்களப்பு வரை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





