உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

நிலவும் கடும் வெப்பம் காரணமாக; உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்.!!!

நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் – வைத்தியர் தீபால் பெரேரா!
இலங்கையில் (Srilanka) நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை “அவதானம்” மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை “எச்சரிக்கை” மட்டத்தில் தொடரக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைகளைத் தடுக்க அதிக தண்ணீர் குடிக்கவும், இயற்கையான நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அவசியம் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230678

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time