உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

150 குடும்பங்களுக்கு ரூ.1,500 இலட்சம் வீடமைப்பு நிதியுதவி
“தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” திட்டம் பதுளையில் ஆரம்பம்.!!!

“தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,500 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான, கௌரவமான மற்றும் நிலையான வீடொன்றை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சொந்த காணி இருந்தும் தற்காலிக அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களும் இத்திட்டத்தில் விசேட கவனத்துடன் தெரிவு செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். வரவேற்பு அறை, இரண்டு படுக்கையறைகள், சமையலறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டின் மொத்த மதிப்பீட்டு செலவு ரூ.20 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ரூ.10 இலட்சத்தை அரசாங்கம் நிதியுதவியாகவும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இலவசமாகவும் வழங்குகிறது. மீதமுள்ள ரூ.10 இலட்சம் பெறுமதி பயனாளிகள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பின் மூலம் ஈடுசெய்யப்படவுள்ளது.

2026 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 9,418 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பதுளை மாவட்டத்திற்கு 257 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு வீட்டுவசதி உதவிக்கான காசோலைகள் இன்று (31) ஊவா மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன.

ஒரு வீட்டிற்கு ரூ.10 இலட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த 150 குடும்பங்களுக்காக அரசாங்கம் மொத்தமாக ரூ.1,500 இலட்சம் முதலீடு செய்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066985

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time