2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு; பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!!!
• ஆகஸ்ட் 3 நள்ளிரவு வரை மட்டுமே இணையவழி திருத்தங்கள் மேற்கொள்ள முடியும்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (A/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் (Admission Cards) ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலக்கெடு எந்தவொரு காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், தங்களது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கம் 1911 அல்லது 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.