பிள்ளையான் மீதான 5 கொலை வழக்கு விசாரணை தீவிரம்; ஜூலை 24 வரை விளக்கமறியல்.!!!
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.