உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 549 பேர் கைது.!!!

நாடு முழுவதும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை நடவடிக்கைகளின் போது மொத்தம் 29,608 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேரும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 309 சாரதிகளும் சட்டநடவடிக்கைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,392 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வகை திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933641

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time