உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் திருத்தப்பட்டு; அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது.!!!

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏலவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டளை இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், முழு நாட்டுக்குமான சமாதான நீதவான் நியமிக்கப்படும் போது, 5 ஆண்டுகளுக்குக் குறையாத காலம் நிர்வாக மாவட்ட சமாதான நீதவானாக செயற்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டளை திருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் சித்திபெற்றவராக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இணைக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230799

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time