உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

April 19, 2026

Hot News

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இரு பிரபல கசிப்பு உற்பத்தியாளர்கள் கைது.!!!

(ஜே.கே)

மட்டக்களப்புமாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் செயல்பட்டு வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது பிரபல கசிப்பு உற்பத்தியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த இடத்திலிருந்து 10 பரல்களில் 70 லீட்டர் கசிப்பு மற்றும் சுமார் 1,417 லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாவிக்கரையில் சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்டு வந்த இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கசிப்பினை விநியோகித்து வந்த இரண்டு பிரபல கசிப்பு வர்த்தகர்களே இச்சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் தொடர்புடைய பொருட்களுடன் சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 766561

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time