உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கடலோரப் பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பெருமளவில் கைப்பற்றம் – கடற்படை அதிரடி நடவடிக்கை.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-

இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கற்பிட்டி தலவில் கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படைக் கப்பல் “விஜய” மூலம் ஞாயிற்றுக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான 28 பைகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது சுமார் 466 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 6,000 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், 1,958 அழகுசாதனப் பொருட்கள், 1,146 பூச்சிக்கொல்லி திரவ போத்தல்கள் மற்றும் 15,180 பிற பொருட்கள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடல் வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படை தொடர்ந்தும் கடற்பரப்பில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066798

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time