இலங்கை மீள்கட்டமைப்புக்கு இந்தியாவின் பாரிய ஆதரவு; டிட்வா சூறாவளிக்காக 350 மில்லியன் டொலர் நிதி.!!!
இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கொழும்பில் இன்று (05) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ‘டிட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்புக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் டொலர் உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் (Line of Credit) ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த நிதி, சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அவசர கொள்வனவு தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

