உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி: 50 வயது நபர் கைது.!!!

கொழும்பில் இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தை பயன்படுத்தி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி, பலரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் மோசடி செய்ததாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 936799

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time