உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஆரையம்பதிக்கு கசிப்பு கடத்த முயன்றவர் கைது; 150 லீற்றர் கசிப்பு பறிமுதல்.!!!

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்திற்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடித் தோணியில் கசிப்பு கடத்திச் சென்ற ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று (10) அதிகாலை கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிகாலை 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவிப் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, மீன்பிடித் தோணியில் கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு வந்த 150 லீற்றர் கசிப்பை கைப்பற்றியதுடன், ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.

மேலும், கசிப்பு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடித் தோணியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066928

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time