உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி; துபாய் இளவரசர் நேரில் பாராட்டு.!!!

துபாயில் விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையில், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை (Smit Machchhar) துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

விமானத்தின் cockpit பகுதியில் கடுமையான தாக்குதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், காயங்களுடன் இருந்தபோதும் கேப்டன் ஸ்மித் துணிச்சலுடன் செயல்பட்டதாகவும், cockpit கதவைத் திறந்து மற்றவர்கள் உள்ளே சென்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த நடவடிக்கையின் மூலம் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் பணியாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் ஸ்மித்தை நேரில் சந்தித்த துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், அவரது துணிவு, பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்கு பாராட்டும் அங்கீகாரமும் தெரிவித்தார்.

மேலும், கேப்டன் ஸ்மித் தமது குழுவின் ஒரு பகுதியாக இருப்பதிலும், மனிதநேயத்தை மதிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் ஒரு பகுதியாக இருப்பதிலும் பெருமை கொள்வதாகவும் இளவரசர் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time