உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

Qatar Charity நிதியில் ரூ.83 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறந்து வைப்பு.!!!

Qatar Charity நிறுவனத்தின் ரூ.83 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் இன்று (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் கலீல் அல் மஹ்மூத் ஆகியோர் இணைந்து குறித்த கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் Qatar Charity அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நஃப்ராஸ் நிலார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய Qatar Charity அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, “கல்வி என்பது உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக இலங்கையிலும் எமது அமைப்பின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.

இந்த நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் மாணவர்களின் அறிவியல் கல்வித் திறன்களை மேம்படுத்துவதோடு, எதிர்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067006

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time